Indian Student Dies in US: அமெரிக்காவில் இந்திய தொழிலதிபரின் மகளுக்கு நடந்த துயரம்.. கார் விபத்தில் சிக்கி பலி., குடும்பமே சோகம்..!

இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவில் வாங்கிய படிப்பு பட்டத்துடன் மகள் திரும்புவார் என பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

Naga Sree Vandhana (Photo Credit: @Ennadu X).jpg

டிசம்பர் 15, டென்னிஸி (World News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெனாலி (Tenali Girl Dies US) மாவட்டம், குண்டூர் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ். இவரின் மனைவி ராமாதேவி. தம்பதிகளுக்கு நாகஸ்ரீ வந்தனா பரிமளா என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்றுள்ளார்.

விபத்தில் சிக்கி உயிரிழப்பு:

அங்குள்ள டென்னிஸி மாகாணத்தில் இருக்கும் டென்னிஸி (University of Tennessee) பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பயின்று வந்துள்ளார். இதனிடையே, அங்குள்ள ராக்வுட் அவென்யூ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நாகஸ்ரீ, படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Techie Suicide: பெங்களூர் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்; மனைவி, மாமியார், மச்சான் அதிரடி கைது.! 

குடும்பத்தினர் சோகம்:

கார் - டிரக் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில், நாகஸ்ரீ உயிரிழந்தார். மேலும், அவரின் நண்பர்கள் நிக்த், பவன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பவன் நிலை மோசமாக உள்ளது. இந்த தகவலானது அவரின் குடும்பத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டதால், அவர்கள் பெரும் யோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

4 ஆண்டுகளுக்கு முன் இதேபோல துயரம்:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, பிரகாஷ் மாவட்டத்தைச் சேர்ந்த பன்குலூரி சிரஞ்சீவி என்பவர், லண்டனுக்கு எம்எஸ் மேற்படிப்பு படிக்கச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதே போன்றதொரு துயரம் அமெரிக்காவில் நடந்துள்ளது. உயர்கல்வி படிக்கும் மகள் நல்ல நிலைக்குச் சென்று வெற்றியுடன் திரும்புவார் என பெற்றோர் எதிர்பார்த்து இருந்த வேளையில், அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து சடலமாக நாடு திரும்புகிறார்.