Indian American: ஹிந்தியில் பேசியதால் வேலையை இழந்த இந்தியர்; அமெரிக்காவில் 78 வயதில் இந்தியருக்கு நடந்தது என்ன?.. விபரம் இதோ.!
அணில் ஏவுகணை தொழில்நுட்ப பிரிவில் இருந்ததாகவும், அங்கு அவர் பணியாற்றும்போது இந்தியாவில் இருந்து சகோதரர் மரண தருவாயில் கிடந்தபோது ஹிந்தியில் பேசியதாக புகார் எழுந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 01, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர் (Indian American Anil Varshney) அணில் வருஷனே (வயது 78). இவர் பொறியாளர் ஆவார். பனாரஸ் பல்கலைக்கழககத்தில் மெக்கானிக்கல் பட்டம் பெற்றுள்ள அணில், 1968ல் அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்று இன்று அமெரிக்க பாதுகாப்பு விஷயங்களில் முக்கியமாக இருக்கும் Parasons Corporation-ன் கிளை நிறுவனத்தில் பொறியாளராக இருந்துள்ளார்.
கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 26ம் தேதி மரணப்படுக்கையில் இருந்த தனது சகோதரரிடம் அலுவலகத்தில் இருந்தபோது செல்போன் மூலமாக அணில் உரையாடி இருக்கிறார். இதனை கவனித்த மற்றொரு பணியாளர், அணில் இராணுவ ரகசியம் குறித்த தரவுகளை ஹிந்தி மொழியில் பகிர்ந்ததாக நிர்வாகத்திடம் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். இதனை அறிந்த நிர்வாகமும் அவரை பணியில் இருந்து உடனடி நீக்கம் செய்துள்ளது. Refrigerator Tips: இல்லத்தரசிகளே உங்களுக்காக அசத்தல் டிப்ஸ்.. உங்கள் வீட்டில் பிரிஜ் இருக்கிறதா?; மறக்காம இவற்றை செய்யுங்க.!
மேலும், எவ்விதமான தகுதியான விசாரணையும் நடைபெறாமல், அவரை பணியில் இருந்து நீக்கிய அதிகாரிகள், அவரை மேற்படி எங்கும் பணியில் சேர இயலாத வகையில் கருப்பு முத்திரையும் குத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அணில் தற்போது சட்டரீதியான விளக்கம் கேட்டு அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் (Lloyd Austin) மற்றும் தான் பணியாற்றிய Al.com நிறுவனத்திற்கும் வழக்கறிஞர் உதவியுடன் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இதுதொடர்பான தகவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு மனுவாக அனுப்பிய அணில், ஜூலை 24ல் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவர் பணியில் இருந்து நீக்கப்படும்போது இராணுவ ரகசியத்தை வெளியிட்டதாக செய்திகளும் வெளியானதால், தனக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நிவர்த்தி செய்ய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்கறிஞரின் மூலமாக சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
அணில் ஏவுகணை தொழில்நுட்ப பிரிவில் இருந்ததாகவும், அங்கு அவர் பணியாற்றும்போது இந்தியாவில் இருந்து சகோதரர் மரண தருவாயில் கிடந்தபோது ஹிந்தியில் பேசியதாக புகார் எழுந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.