Congo Flood Death: திடீரென பெய்த பேய் மழை; நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 200 பேர் பரிதாப பலி., 100 பேர் மாயம்.!

மீட்பு படையினர் விரைந்து சென்றாலும் தொடரும் மழை, நிலச்சரிவு, துண்டிக்கப்பட்ட சாலை உட்பட பல்வேறு காரணங்களால் காங்கோவில் மண்ணில் புதையுண்டு உயிருக்கு போராடும் நபர்களின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

Congo Floods 2023 (Photo Credit: Twitter)

மே 07, காங்கோ குடியரசு (Democratic Republic of Congo): ஆப்ரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் இருக்கும் சவுத் கிவி (South Kivu) பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் (Congo Flood) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மக்கள் சற்றும் எதிர்பாராத வெள்ளத்தால் வீடுகள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டன.

சவுத் கிவி மாகாணத்தில் உள்ள Kalehe பகுதியில் பெய்த கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி தற்போது வரை 200 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 100 பேர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. Tirunelveli Halwa: சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா; வீட்டிலேயே சுவையாக தயாரிப்பது எப்படி?..! முழு விபரம் இதோ.!

வெள்ளத்தின் காரணமாக ஆங்காங்கே தரைவழி போக்குவரத்து என்பது துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மழை பெய்வதாலும் மீட்பு படைகள் தங்களின் பணியை தொடர்ந்து மேற்கொள்ள சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.