IPL Auction 2025 Live

Myanmar Airstrike: மியான்மரில் இராணுவம் அட்டகாசம்.. 100 பேர் வான்வழி தாக்குதலில் பரிதாப பலி..!

கடந்த 1962ல் ஆட்சியை கைப்பற்றி தனது கோர முகத்தை காண்பித்த மியான்மர் இராணுவம், மீண்டும் அதே பாணியில் செயல்பட்டு வருவது உலக நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.

Myanmar Airstrike Visuals (Photo Credit: Twitter)

ஏப்ரல் 12, மியான்மர் (Myanmar News): மியான்மர் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் (Myanmar Election) முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. ஆதலால் நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க இராணுவ ஆட்சி (Army Rule) அமல்படுத்தப்படுவதாக மியான்மர் இராணுவம் (Myanmar Army) ஆட்சியை கைப்பற்றி அறிவிப்பு வெளியிட்டன.

அதன்பேரில், அந்நாட்டில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக கருதப்பட்ட ஆங் சான் சூ கி (Aung Sans Suu kyi) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அங்குள்ள பல அர்ஷியல் தலைவர்களும் அதே நிலையில் வைக்கப்பட்டனர். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். YouTube Down: திடீரென உலகளவில் முடங்கிய யூடியூப்.. பயனர்கள் கடும் அவதி; விடீயோக்களை பார்க்க இயலாமல் திண்டாட்டம்.!

இப்படியாக கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இராணுவத்தை எதிர்த்து போராடிய 3 ஆயிரம் பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மியான்மரில் உள்ள Sagaing மாகாணம், Kanbalu நகரத்திற்கு அருகே உள்ள Pazigyi கிராமத்தில் இராணுவம் வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் கொத்து கொத்தாக இராணுவத்தால் வேட்டையாடப்பட்ட நிலையில், மொத்தமாக 100 பேர் வரையில் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.