Bajaur Bomb Blast: பாஜவுர் பயங்கர குண்டு வெடிப்பு விவகாரம்; 42 பேர் பலி, 111 பேர் படுகாயம்.! அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை.!
இந்த விபத்தில் 42 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஜூலை 31, கைபர் பக்துன்கவா (World News): பாகிஸ்தான் நாட்டில் பயங்கரவாதிகளின் அதிகம் என்பது அதிகரித்து வருவதை, அந்நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் நிலவும் குளறுபடியே உறுதி செய்கிறது. பெரியளவிலான பயங்கர தாக்குதல்கள் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் இன்றளவும் திரைமறைவில் ஆதரிப்பதையும், அதன் ஆதிக்கத்தை தடுக்க நினைக்கத்தையும் உறுதி செய்கிறது.
நேற்று பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணம் (Pakistan's Khyber Pakhtunkhwa), கார் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பாஜவுர் பகுதியில் ஜாமியாட் உலேமா-இ-இஸ்லாம் பாஸ்ல் (Jamiat Ulema-e-Islam Fazl (JUI-F) என்ற அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. Heatwave Warning TN: 2 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் வெயில்; தமிழக மக்களே நமக்குத்தான் எச்சரிக்கை.! விபரம் உள்ளே.!
இந்த கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 400 பேர் கலந்துகொண்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் உரையாற்ற தொடங்கியபோது திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதனால் பதறிப்போன உறுப்பினர்கள், அங்கிருந்து உயிரை கையில் பிடித்து ஓட்டம் எடுத்தனர்.
குண்டு வெடிப்பு விவகாரத்தில் தற்போது வரை என அடுத்தடுத்து 42 பேர் பரிதாபமாக பலியாகினர். கிட்டத்தட்ட 20 பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறியும், 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் தாக்குதலுக்கு திட்டமிட்ட எதிராளிகள் 10 கிலோ அளவிலான வெடி மருந்துகளை பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலலை யார் நடத்தினார்கள்?. எதற்காக நடத்தினார்கள்? என்ற விபரம் இல்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவும் இல்லை.