PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
4 மணிநேர பயண தூரத்தில் இருக்கும் குவைத் நாட்டுக்கு, இந்தியாவின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் 43 ஆண்டுகளுக்கு பின் பயணித்துள்ளது நடந்துள்ளது.
டிசம்பர் 22, மதினாத் அல்-குவைத் (World News): இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குவைத் நாட்டுக்கு 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த பயணத்தில் இந்தியா - குவைத் நட்புறவை வளர்க்கும் வகையிலான, ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளும் நடைபெறுகிறது. மேலும், அங்குள்ள இந்திய மக்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி உரையும் ஆற்றுகிறார். Oreo Biscuits: குட்டிஸ் விரும்பும் ஓரியோ பிஸ்கட்டில் கேன்சரை பரப்பும் கெமிக்கலா? நெட்டிசன்கள் பரபரப்பு குற்றசாட்டு.. உண்மை இதோ.!
43 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் பயணம்:
பிரதமர் நரேந்திர மோடியின் குவைத் பயணம், இந்திய பிரதமராக 43 ஆண்டுகளுக்கு பின் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 43 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமர் என்ற அடையாளத்துடன் குவைத் நாட்டுக்கு அரசுமுறை பயணத்தை முந்தைய பிரதமர் மேற்கொள்ளவில்லை. இதனால் 43 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி குவைத் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் வாயிலாக இந்தியா - குவைத் உறவுகள் மேலும் வலுவடையும், முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில், அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய காணொளி: