Russia Ukraine War: திரையரங்கம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷியா; 5 பேர் பரிதாப பலி; 37 பேர் படுகாயம்.!
அது எதிர்காலத்தில் ரஷியாவின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகலாம் என்ற காரணத்தால் ரஷியா உக்ரைனை தன்னிடம் சரணடையச்சொல்லி போர் தொடுத்துள்ளது.
ஆகஸ்ட் 20, உக்ரைன் (Russia Ukraine Conflict): ஐரோப்பிய யூனியனுடன் இணைய முடிவெடுத்த உக்ரைன் நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிராந்திய பாதுகாப்பு என ரஷியா (Russia) போர்தொடுத்து சென்றது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து பல உதவிகளை செய்து வருகிறது.
ரஷ்யாவின் மீது அமெரிக்கா, ஐரோப்பா (America & European Countries) உட்பட அதன் நட்பு நாடுகள் பல்வேறு விதமான தடைகளை விதித்து இருக்கிறது. உக்ரைன் தன்னிடம் சரணடையும் வரையில் போரில் பின்வாங்கும் எண்ணம் இல்லை. பிற நாடுகள் நேரடியாக களத்திற்கு வந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என ரஷியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. Road Accident Ladakh: இந்திய இராணுவ வீரர்கள் பயணித்த டிரக் கவிழ்ந்து விபத்து; 9 பேர் பரிதாப பலி..!
உக்ரைன் (Ukraine) நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு ரஷியாவால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் வடக்கில் உள்ள செர்னிஹிவ் (Chernihiv) பகுதியில், பகல் வேளையில் திரையரங்கம் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் திரையரங்கில் இருந்த பார்வையாளர்களான 5 பேர் பரிதாபமாக பலியாகினர். குழந்தைகள், பெண்கள் உட்பட 37 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் நடந்த இடத்தில், பெண் எதற்ச்சையாக படம்பிடித்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு நாடுகள் பகிரங்கமாக மோதிக்கொண்ட விஷயங்களில், ரஷியா-உக்ரைன் விவகாரம் உலக நாடுகளினால் பெரிதளவு கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.