IPL Auction 2025 Live

Johannesburg Blast: சாலைகளில் புதைக்கப்பட்டு இருந்த எரிவாயு வழித்தடம் வெடித்து பயங்கர விபத்து; ஒருவர் பலி, 48 பேர் படுகாயம்.! அதிர்ச்சி வீடியோ உள்ளே.!

விசாரணை நடந்து வருகிறது.

Johannesburg Blast (Photo Credit: Twitter)

ஜூலை 21, ஜோகன்ஸ்பர்க் (South Africa): தென்னாப்பிரிக்காவில் உள்ள கௌதேங் மாகாணம், ஜோகன்ஸ்பர்க் (Johannesburg Blast) பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் பயங்கர வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

சாலையில் புதைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், சாலைகளில் இருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டன. கண்ணிமைக்கும் நேரத்தில், யாரும் எதிர்பாராத தருணத்தில் விபத்து நடந்தது. WhatsApp Down: சர்வதேச அளவில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது வாட்சப்; முகப்பு படத்தை மாற்ற இயலாமல் பயனர்கள் அவதி.!

இந்த விபத்தின் காரணமாக பல கார்கள் தூக்கி எறியப்பட்டு, சாலை திரைப்பட பாணியில் விரிசல் விட்டது. இதனால் அங்கு இருந்த பொதுமக்களில் ஒருவர் பரிதாபமாக பலியாகினர். 48 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது வரை விபத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கியாஸ் கசிவின் காரணமாகவே விபத்து நடந்துள்ளது என உள்ளூர் மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.