Animal Activits Naked Protest: "உங்களுக்கு எதுக்கு கம்பளி?.. விலங்குகளுக்குத்தான் தேவை" - விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆடையின்றி போராட்டம்.!

விலங்குகளை கொன்று கம்பளி ஆடை தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் சாலையில் நூதன போராட்டம் நடத்தினர்.

Animal Rights Activist Nude Protest Spain (Photo Credit: @Euronewsgreen Twitter)

ஜனவரி 19, ஸ்பெயின்: மேலை நாடுகளில் (Western Courties) காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு, அதன் உரோமங்கள் கம்பளிகளாக (Wild animals are hunted) தயாரிக்கப்படுவது நடந்து வருகிறது. சில நாடுகளில் இவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருசில நாடுகளில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் உரோமங்கள் கம்பளியாக தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், வணிகரீதியாக கம்பளிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் (Woolen Garment Manufacturing Companies) சட்டவிரோதமாக காட்டு விலங்குகளை கொன்று உரோமங்களை பெற்று கம்பளிகளை தயாரிப்பதாகவும் குற்றசாட்டுகள் இருக்கின்றன. வனவிலங்குகளிடம் இருந்து கம்பளி தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் குழு அங்கு போரட்டம் நடத்தி வருகிறது. Vadivelu Mother Died: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாய் சரோஜினி மரணம்.. காரணம் இதுதான் – உண்மையை உடைத்த வடிவேலு.!

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் (Madrid, Spain) நகரில் வைத்து வனவிலங்கு ஆர்வலர்கள், உடலில் ஒட்டுத்துணியின்றி தங்களின் போராட்டத்தை நடத்தினர். அந்த போராட்டத்தில் விலங்குகளுக்கு தான் ஆடை வேண்டும், உங்களுக்கு தேவையில்லை என்ற வாசகத்தோடு அனைவரும் நிர்வாணமாக வீதியில் படுத்திருந்தனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 05:59 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).