Baby Rescued form Rubble: குழந்தையை பிரசவித்த கணமே நிலநடுக்கத்தால் உயிரிழந்த தாய்.. நெற்றியில் முத்தமிட்டு ஆரத்தழுவி மீட்ட நெகிழ்ச்சி காணொளி.!
திரும்பும் இடமெல்லாம் கட்டிட இடிபாடுகளுடன் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள் நிரம்பினாலும், சில ஆச்சரியங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
பிப்ரவரி 08, சிரியா: துருக்கியை மையமாக வைத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் (Turkey Earthquake), அங்குள்ள சிரியா, லெபனான் (Syria, Lebanon) உட்பட பல அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது துருக்கி மற்றும் சிரியாவில் (Massive Earthquake) கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2 முறை 7 புள்ளிகள் என்ற அளவை கடந்து நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.
துருக்கி மற்றும் சிரியாவில் இருந்த பல அடுக்குமாடி குடியிருப்பு (Apartment Buildings) கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமானதால், இடிபாடுகளில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். பிப்ரவரி 8ம் தேதி மதியம் 02:00 மணி நிலவரப்படி மட்டுமே 8,700 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. Joe Biden Speech Latest: சீனாவுடன் நாங்கள் விரும்புவது இதைத்தான்.. மனம்திறந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!
இந்தியா, அமெரிக்கா (India, America) உட்பட பல உலக நாடுகள் தங்களது நாட்டின் சார்பில் மருத்துவ பொருட்கள் (Medicine), மீட்பு படை (Rescue Team) போன்றவற்றை தொடர்ந்து அனுப்பி வருகிறது. உலக நாடுகளில் முதல் நாடாக தனது மீட்பு படையை இந்தியா துருக்கிக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், சிரியாவில் உள்ள ஆலெபோ (Aleppo, Syria) நகரில் மருத்துவமனை கட்டிடமும் இடிந்து தரைமட்டமானது.
அப்போது, பிரசவ வார்டில் இருந்த தாய் தனது (Pregnant lady Died Baby Rescued) மகனை பிரசவித்துக்கொண்டு இருந்த நிலையில், நிலநடுக்கத்தால் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் தாய்க்கு மரணம் நிகழ்ந்துள்ளது. அந்த பச்சிளம் குழந்தை இடுக்குப்பகுதியில் சிக்கி உயிருடன் இருக்க, நேற்றைய மீட்பு பணியின்போது குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்த காணொளி வைரலாகியுள்ளது.