Syria Civil War: "சிரியா பிரச்சனைக்கு ஈரான் தான் காரணம்" இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு..!
சிரியா உள்நாட்டு மோதல் தொடர்பாக இஸ்ரேல் தூதர் சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 10, டமாஸ்கஸ் (World News): பைபிளிலும் குரானிலும் புண்ணிய பூமி என தெரிவிக்கப்பட்ட இடம் தான் சிரியா. உலகில் முதன்முதலில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடந்த இடமாகவும் சிரியா தான் கருதப்படுகிறது. இந்த பகுதி முதலாம் உலகப் போருக்கு பின்னர் பிரான்சின் கைவசம் சென்றது. 1944 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து விடுதலை பெற்றது. இருப்பினும் சிரியாவை கைப்பற்ற பல நாடுகள் துடித்தன. இதனாலேயே இன்றளவும் சிரியாவில் அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. சிரியாவில் 1963 இல், இராணுவ சதிப்புரட்சி மூலம் ஹபீஸ் அல்-அசாத் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அப்போதிலிருந்து சிரியா அவசரகால சட்டத்தின் கீழ் செயல்படுகிறது. இதனால் குடிமக்களுக்கு சிவில் உரிமை இடைநிறுத்தப்பட்டது. ஹபீஸ் அல்-அசாத் 2000 இல் இறக்கும் வரை அதிகாரத்தில் இருந்தார். அவருக்குப் பின் அவருடைய மகன் பஷர் அல்-அசாத் அதிபர் ஆனார்.
உள்நாட்டுப்போர்:
சிரியாவின் மக்கள் தொகையில் 74% சன்னி இஸ்லாமை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தில் இருக்கும் அசாத்தின் குடும்பம் சியாவின் உட்பிரிவான அலவீத்தர்களாக இருக்கிறார்கள். சிரியாவில் 10 சதவீதத்தினர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். அசாத்தின் ஆட்சி காலத்தில் பெரும்பான்மை சன்னி இஸ்லாமிய மக்கள் தங்களுடைய உரிமையை இழப்பதாக கருதி, போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். அதிபர் அசாத் அதை வன்முறையால் அடக்கினார். இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. 2011 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் உருவாகி பிரச்சனையை சூடேற்றியது. 2019 ஆம் ஆண்டு அதன் தலைவர் கொல்லப்பட்ட பிறகு ஐ. எஸ்.ஐ. எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டாலும், 15க்கும் மேற்பட்ட போராளி அமைப்புகள் சிரியாவை ஆட்சி செய்தன. Syria Civil War: சிரியாவில் ஆட்சிமாற்றம்.. 50 ஆண்டு அரசியலுக்கு கிளர்ச்சிப்படை முற்றுப்புள்ளி.. வரலாறு என்ன? துள்ளல் கொண்டாட்டத்தில் மக்கள்.!
இப்படிப்பட்ட நிலையில், நவம்பர் இறுதியில் அரசுக்கு எதிராக Aleppo உள்ளிட்ட இடங்களில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழு திடீர் தாக்குதல் நடத்தி பல பகுதிகளை கைப்பற்றியது. இது, மற்ற ஆயுதக் குழுக்களுக்கு பாதை அமைத்து தர, தலைநகர் டமாஸ்கஸ் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. முன்னர் சிரியாவில் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தனர். இஸ்ரேல், ஈரான் போன்ற நாடுகளின் உதவியாள் அவை மீட்கப்பட்டன. இருப்பினும் பல பகுதிகள் ஆயுதக் குழு அமைப்பிடமே இருந்தது. அலெப்போ, இட்லிப் ஆகியவையே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி பகுதிகளாக இருந்தன. இந்தப் பகுதிகள் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) ஆயுதக்குழுவின் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தன. ஆனால் பிற கிளர்ச்சிப் பிரிவுகளும் ஜிஹாதி குழுக்களும் அங்கு செயல்பட்டன. இஸ்ரேல் ஈரான் ரஷ்ய படைகளின் உதவியால் மட்டுமே அசாத் ராணுவம் பலமாக செயல்பட்டு வந்தது. ஆனால் இஸ்ரேல், ஈரான், ஹமாஸ், ரஷ்யா, உக்ரைன் போரால் சிரியாவிற்கு இருந்த அவர்களது ராணுவம் திரும்பிச் சென்றது. அவர்கள் இல்லாமல், அசாத்தின் படைகள் பலவீனமடைந்தன.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவின் பெரும்பகுதியை ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் நவம்பர் 30 அன்று கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்கள் பல இடங்களை தொடர்ந்து கைப்பற்றினர். சிரியா தலைநகரை கிளர்ச்சி படைகள் பிடித்த சிலமணி நேரங்களில் அதிபர் அல் ஆசாத் தனது குடும்பத்துடன் வெளியேறி விட்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இப்படி சிரியாவில் அதிபர் ஆசாத் ஆட்சி கவிழ்ந்து உள்ள நிலையில் இஸ்ரேல் சிரியாவை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளது. சிரியாவின் முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் குழு தலைவர் அபு முகம்மது அல் கோலானி , சிரியாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார். ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் கிளர்சிப்படையின் கடந்த கால செயல்களை வைத்து பார்க்கும் போது சிரியாவில் கடுமையான சர்வாதிகார ஆட்சி நடத்தப்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிறது.
இஸ்ரேல் பகீர் குற்றச்சாட்டு: இதற்கிடையே சிரியாவில் இப்போது நடக்கும் மோதலுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பு இல்லை என்றும் சிரியா விவகாரத்தில் ஈடுபட தங்களுக்கு விருப்பம் இல்லை, அதேநேரம் சிரியாவில் இருந்து வரும் எந்தவொரு தாக்குதலுக்கு எதிராகவும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் இஸ்ரேல் தூதர் ருவன் அசார் () குறிப்பிட்டார். மேலும் சிரியாவில் இப்போது நடக்கும் விஷயங்களுக்கு முக்கிய காரணம் ஈரானின் தவறான கணக்கீடுகள் தான் என்று இஸ்ரேல் தூதர் ருவன் அசார் கூறினார். எல்லையில் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் கூறினார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)