Mobile, Smartphones Banned: வகுப்பறைகளில் இனி ஸ்மார்ட்வாட்ச், செல்போன் பயன்படுத்த தடை - நெதர்லாந்து அரசு அதிரடி.!
ஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு செல்போன், டேப்ளட், ஸ்மார்ட்வாட்ச் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 05, நெதர்லாந்து (Netherlands): கடந்த கொரோனா வைரஸ் பரவளின் போது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் உலகெங்கும் நிறுத்தப்பட்டன. ஆன்லைன் வழியில் மாணவ-மாணவியர்கள் பயிலும் வகையில் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்தது.
தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கிவிட்டாலும், வாட்சப் உட்பட குழுக்களின் வழியேயும் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. பள்ளிகளை தவிர்த்து மேலை நாடுகளில் தேவைக்கேற்ப செல்போன் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. MP Tribal Youngster Urinated Case: பழங்குடியின இளைஞரின் மீது சிறுநீர் கழித்த விவகாரம்; குற்றவாளியை இரவோடு இரவாக தட்டி தூக்கிய அதிகாரிகள்.!
இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டு (Dutch Government) அரசு தனது மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, ஜனவரி மாதம் 1ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு செல்போன், டேப்ளட், ஸ்மார்ட்வாட்ச் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பள்ளிகளுக்கு கொண்டு வந்தாலும், அவரவர் அறையில் வைத்துவிட வேண்டும் என்றும், வகுப்பறைகளில் இவைகளை உபயோகம் செய்ய கூடாது என்றும் அறிவித்துள்ளது. அவசியம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே செல்போனை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.