TIME 2024 Person: 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் யார்? டைம் இதழ் ஆய்வு தகவல்.!

இந்தாண்டின் சிறந்த மனிதராக, அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகி உள்ளார்.

Donald Trump (Photo Credit @BhaniR46816 X)

டிசம்பர் 13, வாசிங்டன் (World News): அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் (US Presidential Election 2024) குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க கேபிட்டலில், டொனால்டு டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்க ஆங்கில வார நாளிதழான ‘டைம்’, இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி, 2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் டொனால்டு டிரம்ப் என்று அறிவித்துள்ளது. Trump Calls Chinese President: அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா.. சீன அதிபரை அழைத்த டொனால்ட் டிரம்ப்.!

அமெரிக்க ஆங்கில வார நாளிதழான ‘டைம்’, ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிக செல்வாக்கு பெரும் நபரை தேர்வு செய்து, டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.