Spravato Nasal Spary: மூக்கின் வழியாக செலுத்தப்படும் ஜான்சன் நிறுவனத்தின் மருந்து: அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி.!
உலகளவில் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனனமாக, மூக்கு வழியாக நோய்களுக்கு மருந்துகளை செலுத்தி சிகிச்சை பெற வைக்கும் மருந்தை கண்டறிந்துள்ள ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 24, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு (United States Food and Drug Administration FDA) நிறுவனமான எப்டிஏ (US Food Drug Administration FDA), ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனம் தயாரித்து வரும், மூக்கு வழியாக மருந்தை செலுத்தும் ஸ்ப்ராவாடோவை எஸ்கெட்டமைன் (Spravato Nasal Spray) எனப்படும் நாசி ஸ்பிரேவுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது.
முதல் நாசி மருந்து:
இதன் வாயிலாக மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து சோதனை மற்றும் அறிமுக விஷயத்தில், முதல் நிறுவனமாக ஜான்சன் & ஜான்சன் இடம்பெறுகிறது. இந்த மருந்துகளின் சோதனைகள் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நடந்து வரும் நிலையில், நாசி வழியாக மருந்து செலுத்தப்படும் தனித்துவ சிகிச்சை முறைகளில் ஒன்றாகவும் இது கவணைக்கப்படுகிறது. Beth Moon Photography: வாழ்நாளில் நீங்கள் பார்க்க வாய்ப்பில்லாத மரங்கள்: புகைப்பட கலைஞரின் நெகிழ்ச்சி செயல்.. அசத்தும் கிளிக்ஸ் இங்கே.!
சோதனை முயற்சியில் வெற்றி:
கடந்த 2019ம் ஆண்டு முதல் பலகட்ட சோதனைகள் வெகுவாக நடைபெற்று வரும் நிலையில், மனச்சோர்வு மற்றும் லேசான வகையிலான நோய்களுக்கு முதலில் சோதனை எடுத்துக்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த சோதனை முயற்சியில், மனசோர்வை எதிர்கொள்ளும் நபரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் சுமார் 2.10 கோடி மக்களுக்கு அடுத்தகட்டமாக மிகப்பெரிய மனசோர்வு விடுதலை கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
விரைவில் உலகம் முழுவதும் விற்பனை:
சுமார் நான்கு கட்டங்களாக மருந்து சோதனை நடைபெற்று வந்த நிலையில், ஒருமுறை மருந்தை செலுத்தினால், அதன் தாக்கம் 24 மணிநேரத்தில் தொடங்கி நனவு வாரங்கள் வரை நீடித்து நிற்கும் அம்சத்துடன் இருந்துள்ளது. இதனால் சோதனை முயற்சியில் கிடைத்த வெற்றியாக, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இம்மருந்து உலகம் முழுவதும் சந்தைப்படுத்தப்படும் எனவும் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)