Freezing America: அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவு: மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.!
இந்நாட்களில் அங்குள்ள பல்வேறு நகரங்கள் நேரடியாக பனிப்பொழிவு பிரச்சனையை எதிர்கொள்ளும்.
ஜனவரி 17, வாஷிங்க்டன் டிசி (World News): ஆர்டிக் பகுதியில் ஏற்பட்ட பனி வெடிப்பு காரணமாக, அமெரிக்கா முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவை (US Winter Season) எதிர்கொள்ளவேண்டிய தருணம் உண்டாகியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள 142 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பனிப்பொழிவு சார்ந்த எச்சரிக்கையை பெற்றுள்ளனர். வரலாறு காணாத கடும் பனிப்பொழிவை சந்தித்துள்ள அமெரிக்கா, தனது மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது. பயணங்கள் மேற்கொள்வோர் அத்தியாவசிய பணிக்காக, பாதுகாப்புடன் பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-30 டிகிரி வரை வெப்பநிலை குறைவு: அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள பனி (Cold Wave), கடும் குளிர் காரணமாக பல்வேறு இடங்களில் பூஜ்ஜியத்துக்கு கீழ் வெப்பநிலை குறைந்து, மைனஸ் 30 டிகிரி வரை வெப்பநிலை சென்றுள்ளது. இதனால் வரலாறு காணாத பனிப்பொழிவை அந்நாடு மீண்டும் சந்தித்துள்ளது. மேற்கு கனடாவில் இருந்து அமெரிக்காவில் தென்கிழக்கு நோக்கி பயணிக்க தொடங்கி பனிக்காற்று, அமெரிக்காவின் வடக்கு பகுதியில் தொடங்கி கடைக்கோடி தென் பகுதி வரை சென்றடைந்து மிசிசிபி பள்ளத்தாக்கை அடையும். கடும் குளிர் கொண்ட இந்த வெப்பநிலையானது, நாட்டில் பல இறப்புகளை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் பாதுகாப்பக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. Chennai Travelers: பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்; எளிதில் நகர்ப்பகுதிகளுக்கு செல்ல அசத்தல் டிப்ஸ்.!
பள்ளிகள் மூடல், விமான செய்வார்கள் பாதிப்பு: இதனால் அந்நாட்டில் தேசிய அளவில் 1300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 11 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் திடீர் மின்சார பிரச்சனையை சந்தித்துள்ள்ளது. வாஷிங்டன் பகுதியில் ஒரே இரவில் ஒரு அங்குலம் அளவு பனிமழை பெய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு பின்னர் இந்த அளவிலான பனிகொட்டித்தீர்த்துள்ளது. இதனால் அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன.
உறைந்துபோன பல நகரங்கள்:
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், தனது நாட்டு மக்கள் பனியில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்: