Kilambakkam Bus Stand (Photo Credit: Facebook)

ஜனவரி 17, சென்னை (Chennai): தமிழர்கள் சிறப்பித்துக் கொண்டாடும் அறுவடை திருநாளான தைப்பொங்கல் தற்போது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. காணும் பொங்கல் ஆன இன்று வெளியூரில் இருந்து பணியாற்றி வந்து, பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பியோர் மீண்டும் தங்களது பணியிடங்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். பயணிகளின் சேவையை கணக்கில் கொண்டு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல இரயில்வே நிர்வாகத்தால் சிறப்பு இரயில்களும் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே தொலைதூர அரசு பேருந்து சேவை: இன்று (ஜனவரி 17, 2024) இரவு முதல் பலரும் சென்னை நகரை நோக்கி படையெடுக்க தொடங்குவார்கள் என்பதால், மீண்டும் வரும் இரண்டு நாட்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் சென்னையில ஏற்படும். சென்னையை நோக்கியுள்ள சுங்கச்சாவடி மையங்கள் அனைத்தும் மாலை நேரத்திற்கு பின்னர் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கத்தொடங்கும். அந்த வகையில், தற்போது சென்னையில் தென் மாவட்ட பயணிகளுக்கு பிரத்தியேகமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகள், அரசு பேருந்து பயன்படுத்துவோராக இருப்பின் புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்படுவார்கள். Defamation Case Against MS Dhoni: தோனிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனுதாக்கல்: காரணம் என்ன?.. விபரம் இதோ.! 

புறவழிச்சாலை பயன்பாடு அதிகரிப்பு: அதனைத்தொடர்ந்து, அவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மாநகர பேருந்துகள் உதவியுடன் சென்னை நகரில் பல்வேறு பகுதிகளை சென்றடையலாம். ஆம்னி பேருந்துகள் தற்காலிகமாக கோயம்பேடு வரை செல்லும் எனினும், நகரின் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவை பெருங்களத்தூரில் இருந்து புறவழிச்சாலை வழியாக மதுரவாயல் நெடுஞ்சாலைக்கு அனுப்பப்பட்டடு, அங்கிருந்து கோயம்பேடு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கிளாம்பாக்கம் - ஊரப்பாக்கம்: இதனால் அரசு பேருந்துகளில் வருவோர் ஊர்ப்பக்கம் சென்று புறநகர் இரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஊரப்பாக்கத்திற்கு நடந்து அல்லது ஆட்டோ உதவியுடன் செல்ல வேண்டி இருக்கும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஊரப்பாக்கம் இரயில் நிலையத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் பிடிக்கும். இதனால் சென்னை நகரை அடைய நினைக்கும் நபர்கள் பொத்தேரியில் இறங்கி ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.

பொத்தேரி இரயில் நிலையத்தை எளிதில் உபயோகம் செய்யலாம்: ஏனெனில் பொத்தேரில் ஜிஎஸ்டி சாலைக்கு மிக அருகில் இரயில் நிலையம் இருப்பதால், அங்கிருந்து மின்சார இரயில் சேவையை பலரும் பயன்படுத்தலாம். தனியார் பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஊரப்பாக்கம் அல்லது வண்டலூரில் இறங்கி மின்சார இரயில் சேவையையும் பயன்படுத்தலாம். பெருங்களத்தூர் செல்லும் பயணிகள் அங்கிருந்து மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார ரயில் சேவையை எளிதில் அணுகலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க டிக்கெட் எடுப்பதற்கு யூடிஎஸ் (UTS App) செயலியை பயன்படுத்தி பலன் பெறலாம்.