WHO on Chicken: சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் தீமை... உலகளவில் கொடூரமான பத்தாவது நோய் ஏற்படும் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!
நாம் சிக்கனை விரும்பி சாப்பிட்டால் அது பின் நாட்களில் நமக்கு உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை கொண்டுள்ள நோய்களை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 02, உலக சுகாதார அமைப்பு (WHO Statement on Chicken): நாம் அதிக அளவில் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் முக்கியமானது சிக்கன். கோழி இறைச்சியின் மூலமாக கிடைக்கப்பெறும் சிக்கன், முந்தைய காலங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழியை விரும்பி சாப்பிட்டோம். அன்று நமது பெற்றோர் குழம்பு வைத்து தருவார்கள்.
ஆண்டுகளும் வேகமெடுத்து ஓட, வணிக ரீதியான கோழி பிராய்லர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிராய்லர் கோழிகளின் முட்டைகளை நாம் இப்போது பெருமளவில் சாப்பிட்டு வருகிறோம், அதேபோல பிராய்லர் கோழிகளை வார இறுதியில் சுவையாக பிரியாணி, சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், பெப்பர் சிக்கன், சில்லி சிக்கன் என்று பலவிதமான பெயர்களில் சாப்பிட்டு வருகிறோம்.
வீட்டில் வாங்கி வைத்து சாப்பிடும் சிக்கனின் தரம் கேள்விக்குறியானால், நமது உடல் நலனும் பாதிக்கப்படுகிறது. சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது, அதிலும் பிராய்லர் கோழிகள் மோசம் என மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். AI Drone Killed Human: சோதனையில் மனிதரை கண்மூடித்தனமாக இரக்கமின்றி கொன்ற செயற்கை நுண்ணறிவு டிரோன்.. உத்தரவை மீறத்துடிக்கும் AI..!
இந்த நிலையில், கோழிகள் சாப்பிடுவது உடலுக்கு பல தீங்கான விஷயங்களை ஏற்படுத்தும், உலகளவில் மிகப்பெரிய உடல்நல கோளாறுகளை உண்டாக்கும் என்று தற்போது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, "கோழி வகைகளை சாப்பிடுவது உடலுக்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்தும். அதில் உள்ள வைரஸ், ஒட்டுண்ணி, பாக்டீரியா போன்றவை மரபணு மாற்றத்தை தற்போது கொண்டுள்ளது. இந்த மரபணு மாற்றம் இயற்கையாக இருக்கக்கூடியது என்றாலும் ஆபத்தானது.
இதனால் தற்போதைய நிலைமையில் AMR எனப்படும் ஆன்டி-மைக்ரோபியல் காரணமாக ஆண்டுக்கு ஏழு லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். 2050-ம் ஆண்டுக்குள் இது 10 மில்லியன் இறப்புக்களை ஏற்படுத்தும். ஆகையால் மக்கள் தங்களின் விருப்ப உணவான கோழி இறைச்சியை தவிர்ப்பது நல்லது" என்று கேட்டுக்கொண்டுள்ளது.