Guinness Record: உலகிலேயே அதிக சப்தம் எழுப்பும் பெண்மணி இவர்தான்; கின்னஸ் சாதனையின் விபரம் இதோ.!

அந்த சாதனையை அமெரிக்க பெண்மணி முறியடித்து இருக்கிறார்.

Kimberly Kimycola Winter (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 03, அமெரிக்கா (United States of America): சர்வதேச அளவில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் தனித்திறமையை உலகளவில் அறிமுகம் செய்யும் கின்னஸ் சாதனை புத்தகம், பல தனித்திறமையாளர்களை அறிமுகம் செய்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த பெண்மணி கிம்பர்லி கிமிகோலா வின்டர் (Kimberly Kimycola Winter).

இவருக்கு இயல்பாகவே அதிக சபதம் எழுப்பும் தொண்டை இருந்துள்ளளது. இயற்கையாக சிறு வயதில் இருந்து அதிக சப்தம் எழுப்பும் தன்மை கொண்ட கிம்பர்லி தற்போது பழைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

அதாவது, உலகிலேயே அதிக சப்தம் எழுப்பும் குரல்வளை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனையை அவர் படைத்துள்ளார். முன்னதாக 107 டெசிபல் (107 dB) புள்ளிகளுடன் இத்தாலியை சேர்ந்தவர் சாதனை செய்திருந்தார். KL Rahul: வெறித்தனமாக தயாராகும் கே.எல் ராகுல்; ஆசிய கோப்பை 2023-க்கு அதிரடியாக தயாராகும் அசத்தல் வீடியோ.!

இத்தாலி நாட்டினை சேர்ந்த எலிசா கக்னோனி (Elisa Cagnoni) என்பவர் அதிக சப்தம் எழுப்பும் குரல்வளை கொண்டவர் என்ற பெருமையை தக்க வைத்திருந்தார். அந்த சாதனையை அமெரிக்க பெண்மணி முறியடித்து இருக்கிறார்.

பழைய சாதனையை விட 3 புள்ளிகள் வரை அதிகம் பெற்ற கிம்பர்லி 107.3 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். அவரின் ஒலி எழுப்பும் திறனை கண்டு ஆரம்பத்தில் கவலைப்பட்ட பெற்றோர், தற்போது கின்னஸ் சாதனை படைத்தும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.