Holi Car Care Tips: ஹோலியால் கண்டமான காரை புதுசாக்குவது எப்படி?. விபரம் இதோ..!

ஹோலி பண்டிகையின் போது நாம் நமது கார் பைக் போன்ற வாகனங்களை பொது இடத்தில் நிறுத்தி இருந்தால் சிலர் ஹோலி பண்டிகையில் கலர் பூசி விளையாடும்போது நம் வாகனத்திலும் அந்த கலர் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது, இப்படியாக படிந்திருக்கும் கலர்களை எப்படி நீக்குவது என்பதை பற்றிய டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

Car Cleaning (Photo Credit: Pixabay)

மார்ச் 26, சென்னை (Chennai): ஹோலியின் போது கலர் பொடிகள் வீசப்பட்டு கார் பாதிக்கப்பட்டால் அந்த காரை கழுவும் போது ஹார்டான கெமிக்கல் பயன்படுத்தாமல் சாஃப்டான, அதே நேரம் மைல்டான சோப்புகளை பயன்படுத்தி காரை கழுவ வேண்டும். காரை கழுவும் முன்பு நேரடியாக சோப்பை பூசாமல் முதலில் ஒரு தண்ணீரை வைத்து சுத்தப்படுத்திவிட்டு பின்பு சோப்புகளை வைத்து காரை சுத்தப்படுத்தினால், காரின் பெயிண்டிற்கு எந்த விதமான பிரச்சினையும் வராது. World Idli Day 2024: காலையில் காணும் நிலவுக்கு இன்று விசேஷ தினம்.. ஆவி பறக்க இட்லி தினத்தைக் கொண்டாடுங்கள்..!

ஸ்கிரப் மற்றும் பிரஷ்களை கொண்டு காரின் வெளிப்புறத்தை துடைக்க கூடாது. இதை செய்தால் காரில் ஸ்கிராட்சைகள் ஏற்படும். மேலும் அதில் கலர் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்பு ஒரு முறை நீங்கள் காரை வேக்ஸ் செய்யவோ அல்லது பாலிஷ் செய்யவோ செய்துவிட்டால் கார் மீண்டும் அதன் பழைய பளபளப்பு தன்மையை பெற்றுவிடும். வேக்ஸிங் செய்வதால் இனி வரக்கூடிய பிரச்சினைகளும் தவிர்க்கப்படும்.