Xiaomi SU7 EV Launch in India: "சியோமினா.. போன், பவர்பேங்க் மட்டும் தான் தயாரிச்சிட்டு ஓரமா இருப்போம்னு நினைச்சியா.?" புதிய காரை களத்தில் இறக்கிய சியோமி..!

சியோமி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Xiaomi SU7 (Photo Credit: @engineers_feed X)

ஏப்ரல் 01, புதுடெல்லி (New Delhi): சீன டிஜிட்டல் சாதன தயாரிப்பாளரான சியோமி ஆட்டோமொபைல் துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சியோமி (Xiaomi) தனது முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சிறப்பம்சங்கள்: மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி எஸ்யூ7 எலக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை சீனாவில் 215,900 யுவான்களாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.24.92 லட்சம் ஆகும். தற்போது இந்த காரானது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் செய்யவுள்ளது. சீனாவில் முன்பதிவுகள் துவங்கப்பட்ட வெறும் 4 நிமிடங்களில் சுமார் 10 ஆயிரம் சியோமி எஸ்யூ7 கார்கள் மக்களால் புக் செய்யப்பட்டுள்ளன. April Fool's Day 2024: உலக முட்டாள்கள் தினம்.. சிம்பு ஸ்டைலில் வித்தியாசமான நாளில் புத்தாண்டை கொண்டாடிய மக்கள்..!

இந்த எஸ்யூ7 தேர்வின் (Xiaomi SU7 EV) சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 73.6 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. காரின் 3 வேரியண்ட்களாவன, ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் மேக்ஸ் ஆகும். இவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான திறன்களில் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டில் கிடைக்கும் 73.6 kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 700கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். புரோ வேரியண்ட்டில் இன்னும் கொஞ்சம் திறன்மிக்க 94.3 kWh பேட்டரி பேக் கிடைக்கும். இதன் ரேஞ்ச் 830கிமீ ஆகும். விலையுயர்ந்த மேக்ஸ் வேரியண்ட்டில் 101kWh பேட்டரி பேக்கை சியோமி வழங்கவுள்ளது. இதன் ரேஞ்ச் 800கிமீ ஆகும்.

4.6 லிட்டர் அளவுள்ள சிறிய ஃப்ரிட்ஜ், ஓர் லேப்டாப்பை உள்ளடக்கிக் கொள்ளும் வகையில் பெரிய குளோவ் பாக்ஸ் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மிகுந்த பொழுதுபோக்கான ரைடு அனுபவத்தைப் பெறும் விதமாக இந்த எலெக்ட்ரிக் காரில் 25 ஸ்பீக்கர்கள் கொண்ட டால்ஃபி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் இந்த காரின் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்போர்ட்ஸ் கார் போன்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif