ஏப்ரல் 01, புதுடெல்லி (New Delhi): நீங்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும், ஏப்ரல் 1 அனைவரையும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை விளையாட்டாக ஏமாற்றுவதையும், பிராங்க் செய்வதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் இந்த நாளில் நாமெல்லாம் பள்ளிப் பருவத்தில், சக நண்பர்களிடம், வீட்டில் உள்ளவர்களிடம் அன்று ஏமாறாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் அதில் இருந்த ஆர்வமும் மறக்க முடியாது. உன் சட்டையிலே என்ன கற ? உன் தோடு காணோம்? என்று ஆரம்பித்து பல ஏமாற்றுக் கேள்விகளை நண்பர்களிடம் சொல்லி விளையாடி இருப்போம். HC On Sex Outside Marriage: "இது குத்தமாண்ணே.. குத்தமே இல்ல.." ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!
வரலாறு: 1564 ஆம் ஆண்டு பிரான்சில் ஏப்ரல் முட்டாள்கள் தினம் (April Fool's Day) தொடங்கியது என்று வரலாறு கூறுகின்றன. 1564 ஆம் ஆண்டுக்கு முன், ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டது. பழைய காலண்டரை பின்பற்ற வலியுறுத்தியவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் புதிய காலண்டர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜனவரிக்கு மாற்றப்பட்டன. இருப்பினும், மக்களில் சில பிரிவினர் மார்ச் அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் தொடர்ந்து புத்தாண்டைக் கொண்டாடினர், மேலும் புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொண்டவர்களின் புரளிகள் மற்றும் நகைச்சுவைகளுக்கு ஆளாகினர். அந்த மக்கள் பிரிவுகள் ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டனர். பின்னர் 18 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் 1 முட்டாள் தினம் பிரிட்டன் முழுவதும் பரவியது.
மொத்தத்தில் ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் சிரித்தபடி ஏற்கும் பக்குவத்தை பேதமில்லாமல் அனைவருக்கும் ஊட்டும் இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கிறது.