Hero Maverick 440: செம பைக்கை அறிமுகப்படுத்திய ஹீரோ.. இவ்வளவு குறைவா..!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் மோட்டார் சைக்கிளாக மேவரிக் 440 என்ற பிரிமியம் செக்மென்ட் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 14, சென்னை (Chennai): ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் (Hero) தனது ஃப்ளாக்ஷிப் பைக்காக மேவரிக் 440 (Mavrick 440) என்ற பைக்கை அப்பர் பிரிமியம் செக்மெண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குக்கான புக்கிங் இன்று முதல் துவங்குகிறது. பைக்கின் விநியோகம் ஏப்ரல் 2024 முதல் தொடங்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, ஹீரோ மேவ்ரிக் 440 ஆனது முழு LED லைட்டிங் மற்றும் ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அழைப்பு மற்றும் செய்தி விழிப்பூட்டல்களுடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது. Hero Maverick 440 ஆனது Harley-Davidson X440 க்கு சக்தியளிக்கும் அதே 440cc, ஆயில்-கூல்டு எஞ்சினைப் பயன்படுத்துகிறது . சிங்கிள் சிலிண்டர் மோட்டார் 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது ஆறு-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. Ghaziabad Brawl Video: கவுர் சித்தார்த்தம் சொசைட்டியில் ஒருவரை இரக்கமின்றி தாக்கிய பாதுகாப்புக் காவலர்கள்.. வைரலாகும் வீடியோ..!
இதில் பேஸிக் வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 1.99 லட்சம் விலையிலும், மிட் வேரியன்ட் ரூபாய் 2.14 லட்சம் விலையிலும் டாப் வேரியன்ட் ரூபாய் 2.24 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் அலாய் வெர்ஷனில் மொத்தம் 187 கிலோ எடை கொண்டது ஸ்போக் வீலில் மொத்தம் 191 கிலோ எடை கொண்டது. மொத்தம் 13.5 லிட்டர் கொண்ட பெட்ரோல் டேங்க்கை கொண்டதாக இந்த பைக் இருக்கிறது.