மார்ச் 19, குஜராத் (Gujarat News): குஜராத்தில் கிர் தேசிய சரணாலயத்துக்கு அருகே இரவு நேரத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கில் இருவர் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு எதிரே மெல்ல அண்ண நடை போட்டு ஒரு இளம் ஆண் சிங்கம் வந்துள்ளது. இதனை கண்டதும் பைக்கில் வந்தவர்கள் உடனடியாக தங்களது பைக்கை நிறுத்திவிட்டு மரண பயத்துடன் தங்களை நோக்கிவரும் சிங்கத்தை (Lion) பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பைக்கை நோக்கி வந்த சிங்கம் திடீரென சாலையை கடந்து, அங்கிருந்த கல் சுவரின் மீது ஏறி தாண்டி சென்றுவிட்டது. உயிர் போய் உயிர் வந்ததாக நினைத்த பைக் பயணிகள், உடனே அங்கிருந்து தப்பித்து கிளம்பிவிட்டனர். இதனை அவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ தான் இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Sony PS5 Pro: சோனியின் புதிய பிளேஸ்டேஷன் மாடல்.. பிளேஸ்டேஷன் 5 ப்ரோ.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!