IPL Auction 2025 Live

T7 Heavy Duty Tractor: மாட்டு சாணத்தில் இயங்கும் டி7 டிராக்டர்.. சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?!

சுற்றுச்சுழலைக் கெடுக்காத வகையில் மாட்டு சாணத்தில் இயங்கும் டி7 டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

T7 Tractor (Photo Credit: @RobertsFarmEq X)

ஆகஸ்ட் 26, சென்னை (Chennai): பெட்ரோல் டீசலின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நாடாக இருக்கிறது இந்தியா. பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். அதிலும் பெட்ரோல் டீசலின் விலையும் அதிகரித்தவாறே உள்ளது. இதற்கு மாற்றாக விவசாயிகளுக்கு செலவில்லாமல் மீதேனில் இயங்கும் ‘நீயூ ஹாலேண்ட் டி6’ என்ற டிராக்டரை நியூ ஹாலேண்ட் அக்ரிகல்சர் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது சாணத்திலிருந்து வெளியேறும் மீத்தேன் வாயு மூலம் இயங்குகிறது. Pudhumai Penn Scheme: பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் புதுமைப் பெண் திட்டம்.. விபரம் உள்ளே..!

சிறப்பம்சங்கள்: மீதேனை விவசாயிகளே தாமாகவே மாட்டு சாணம் மூலம் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த டி7 டிராக்டரில் (T7 Tractor) மாட்டு சாணத்தை போட்டு வைக்க டிராக்டரில் 185 லிட்டர் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இது இஞ்சின் 180 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த டிராக்டர் 62% நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் 15% கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றை வெளியிடும். மீத்தேன் வாயுவைக் குறிப்பிட்ட அளவு குளிர்வித்து அதைத் திரவ வடிவிற்கு மாற்றி அதை இன்ஜினில் பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தில் சுற்றுச்சுழலைக் கெடுக்காத வகையில் இந்த டிராக்டர்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.