Saving Schemes (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 26, சென்னை (Chennai): `புதுமைப் பெண் திட்ட'த்திற்காக தமிழக அரசுடன் இணைந்து பேங்க் ஆஃப் பரோடா `ரூபே பிளாட்டினம்' அட்டை கடந்த 2023-ல் அறிமுகம் செய்யப்பட்டது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின்கீழ், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கும் `புதுமைப் பெண் திட்டத்தை' (Pudhumai Penn Scheme) கடந்த ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. Women's Equality Day 2024: இன்று பெண்கள் சமத்துவ தினம்.. இத்தினத்தின் பின்னால் இருக்கும் வரலாறு என்ன?!

புதுமைப் பெண் திட்டம்: இதனடிப்படையில் கணக்கு வைத்திருப்பவர், பேங்க் ஆஃப் பரோடாவால் வெளியிட்ட ரூபே பிளாட்டினம் அட்டையை வைத்திருந்தால், தனிநபர் விபத்து காப்பீடாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலான காப்பீட்டு தொகை வழங்கப்படும். இந்த ரூபே பிளாட்டினம் அட்டைக்கு முதல் ஆண்டில் சேர்க்கைக் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் மேலும் இந்த கார்டில் வாங்கும் ஆடைகள், ஷாப்பிங்களுக்கு, பயண டிக்கெட்டுகளுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகிறது என்று பேங்க் ஆஃப் பரோடா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.