UP Tractor Container Accident Today (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 25, புலந்த்சாகர் (Uttar Pradeh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கசன்கஞ்ச் மாவட்டத்திலிருந்து, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோகமேடி பகுதிக்கு 50க்கும் அதிகமான பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த டிராக்டர் தேசிய நெடுஞ்சாலை எண் 34ல், புலந்த்சாகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கதல் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. JustIN: மகன் கண்முன் கொடுமை.. வரதட்சணைக்காக மனைவியை எரித்துக்கொன்ற கணவன் என்கவுண்டர்.!

8 பேர் பலி., 43 பேர் படுகாயம்:

பக்தர்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கண்டைனர் லாரி ஒன்று மோதி இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 8 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 43க்கும் அதிகமானோர் காயத்துடன் அலறித்துடித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

விபத்துக்குப்பின் எடுக்கப்பட்ட காணொளி: