IPL Auction 2025 Live

Xiaomi Mi Car: சியோமியின் முதல் கார்.. 5 நிமிட சார்ஜில் 220 கிமீ...!

உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான சியோமி, அதன் முதல் எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Xiaomi SU7 (Photo Credit: @engineers_feed X)

டிசம்பர் 29, சென்னை (Chennai): சீன டிஜிட்டல் சாதன தயாரிப்பாளரான சியோமி ஆட்டோமொபைல் துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சியோமி (Xiaomi) இந்த இரண்டு மாடல்களான எஸ்யூ7 (SU7) மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் (SU7 Max) ஆகியவற்றை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்த சியோமி கார்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ஓடுவதாகக் கூறுகிறது. India vs South Africa: 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை... விராட் கோலி படைத்த புதிய சாதனை..!

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கார் 21,000 rpm வேகத்தில் இயங்கக்கூடிய ஹைப்பர் என்ஜின் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த காரில் 35,000pm பதிப்பும் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது. காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 265 கி.மீ.. 0 முதல் 100 கிமீ வேகத்தை தொட 278 வினாடிகள் ஆகும். இன்று கிடைக்கும் பல ஸ்போர்ட்ஸ் கார்களில் கூட இது இல்லை.

Mercedes-Benz மற்றும் BMW போன்ற உலகின் முன்னணி கார் நிறுவனங்களின் நிபுணர்களால் இந்த காரை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்போர்ட்ஸ் கார் போன்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.