டிசம்பர் 29, செஞ்சுரியன் (Centurion): இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தின் இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது, விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார். அவர் 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அப்போது நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் 2,000-ஐ கடந்தது. இதன் மூலம் 7 வெவ்வேறு ஆண்டுகளில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். Bomb Threat: விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பலத்த பாதுகாப்பு..!
இதற்கு முன்பு, 2012 (2,186 ரன்கள்), 2014 (2,286 ரன்கள்), 2016 (2,595 ரன்கள்), 2017 (2,818 ரன்கள்), 2018 (2,735 ரன்கள்) மற்றும் 2019 (2,455 ரன்கள்) எடுத்து ஆகிய ஆண்டுகளில் 2,000 ரன்களை கோலி கடந்திருந்தார். இதன் மூலம் 146 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் இப்படியொரு சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.