Pankaj Udhas Dies: பத்ம ஶ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற பாடகர் பங்கஜ் உத்ஹாஸ் காலமானார்: சோகத்தில் ரசிகர்கள்.!

கஜல் எனப்படும் பாடல் வகையில் புகழ்பெற்ற இந்திய பாடகர், தனது வயது மூப்பு காரணமாக மறைந்தார்‌.

Pankaj Udhas (Photo Credit: @Anurag thakur X)

பிப்ரவரி 26, மும்பை (Cinema News): குஜராத் மாநிலத்தைச் சார்ந்த புகழ்பெற்ற குஜராத்தி பாடகர் பங்கஜ் உத்ஹாஸ்‌ (Pankaj Udhas). கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான 'சிட்டி ஆயி கை' படத்தில் இவர் பாடிய பாடல் ஒன்று வைரலாகி வரவேற்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிரபல பாடகராகவும் இவர் திரை உலகில் அறியப்பட்டார்‌. புகழ்பெற்ற கஜல் பாடகராக சர்வதேச அளவில் அறியப்பட்டு வந்த இவருக்கு, கடந்த 2006 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் கிடைத்தது. 

பின்னணி பாடகர் & நடிகர்: இவரது மூத்த சகோதரர் மேடை கலைஞர் ஆவார். அதன் வாயிலாக இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து திரை உலகில் பாடகராக பணியாற்றி வந்துள்ளார். பின்னணி பாடகராக மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் அவர் நடிக்கவும் செய்துள்ளார்.

உடல்நலக்குறைவால் மறைவு: தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வரும் இவர், 72 வயதில் வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவாக அவதிப்பட்டு உள்ளார். இந்நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்தது. இந்த தகவல் அவரின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

உத்ஹாசின் மறைவுக்கு பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.