Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி - செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!
பாராளுமன்ற கட்டிடத்தில் சோழர்களின் செங்கோலை இடம்பெற வழிவகை செய்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மே 27, புதுடெல்லி (Parliament India): ஆங்கிலேயர் அமைத்த பாராளுமன்றத்தை விடுத்து, 100 ஆண்டுகள் கழித்து இந்தியர்களால் இந்தியாவுக்கென பாராளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 64,500 சதுர மீட்டர் பரப்பு பாராளுமன்றம், இது ரூ.862 கோடி செலவில் கட்டப்பட்டது.
லோக் சபாவில் 1,272 பேர் அமரும் இருக்கையும், ராஜ்ய சபாவில் 384 பேர் அமரும் வகையில் இருக்கையும் உள்ளன. சென்ட்ரல் ஹால் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதிய பாராளுமன்றம் திறக்கப்படவுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி சோழர்களின் செங்கோலை சிவனடியார்கள், தர்மபுரம் ஆதீன ஸ்வாமிகள் முன்பு பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், பிரதமருக்கு நன்றி தெரிவித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட் பதிவு செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், "இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். #தமிழன்டா.. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என கூறியுள்ளார்.