Rajinikanth Wish to Team Amaran: அமரன் திரைபடக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்; மகிழ்ச்சியில் படக்குழு.!

சாய்பல்லவி அமரன் படத்தில் ஒவ்வொரு நுணுக்கமான நடிப்பையும் திறமையாக வெளிப்படுத்தி, படத்தின் வெற்றிக்கு மிகவும் பெரும்பங்காற்றி இருக்கிறார்.

Team Amaran with Actor Rajinikanth (Photo Credit: @RKFI X)

நவம்பர் 02, சென்னை (Cinema News): ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாக உருவான அமரன் (Amaran), தீபாவளியை முன்னிட்டு அக்.21 அன்று திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ரூ.160 கோடி செலவில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் சிவகார்த்தியேன், சாய்பல்லவியின் நடிப்பு தத்ரூபமாக அமைந்துள்ளதால், மிகப்பெரிய அளவிலான வெற்றி மற்றும் பாராட்டுகளை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Squid Game Season 2: ஸ்குவிட் கேம் சீசன் 2: அசத்தல் டீசர் உள்ளே.. உலகளவில் டிசம்பர் 26ல் வெளியீடு.!

மேஜர் முகுந்த்தின் வாழ்க்கைத் திரைப்படம்:

இப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மறைந்த இந்திய இராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்டையாகக் கொண்டு உருவான அமரன் திரைப்படம், முழுக்க முழுக்க இராணுவம், காதல் சார்ந்த கதையம்சத்துடன் திரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டு:

முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடியை கடந்து வசூல் செய்திருந்த அமரன் திரைப்படம், விரைவில் ரூ.200 கோடியை கடந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாக இப்படம் அமையும் எனவும் நம்பப்படுகிறது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் நேற்று அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது நண்பர் கமல் ஹாசனை போனில் தொடர்புகொண்டு, இப்படியான படத்தை தயாரித்து வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இன்று படக்குழுவை நேரில் அழைத்த ரஜினிகாந்த், தனது வீட்டில் வைத்து பாராட்டி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

அமரன் படக்குழு நடிகர் ரஜினிகாந்துடன்:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif