Silk Smitha: நடிகை சில்க் சுமிதாவின் நினைவுநாள்; அன்னதானம் வழங்கி, மலர்தூவி அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!
இன்று வரை மர்மமாக இருக்கும் நடிகைகளின் மரணங்களில் முக்கியமானதாக கவனிக்கப்படுவது சில்க் சுமிதா. இன்று வரை அவரின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகவில்லை எனினும், ரசிகர்களும் அவரை மறக்கவில்லை.
செப்டம்பர் 23, ஈரோடு (Cinema News): தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக 1980 மற்றும் 90களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வலம்வந்த நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியான பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்ட நடிகையாகவும் கவனிக்கப்பட்டார்.
வண்டிச்சக்கரத்தில் தொடங்கிய திரை வாழ்க்கை:
திரையுலகில் 18 ஆண்டுகளில் மட்டும் அவர் மொத்தமாக 450 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருந்தார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, பின்னாளில் சில்க் சுமிதா (Actress Silk Smitha) என்று அழைக்கப்பட்டார். ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள எலுரு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர், இயக்குனர் வினு சக்கரவர்த்தியின் மூலமாக திரைப்படத்தில் பாடலில் நடனம் ஒன்றில் தோன்றி பின் வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் இருந்து நடிக்க தொடங்கினார். Miss Universe India 2024: மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக 18 வயதுடைய ரேகா சிங்; மகிழ்ச்சியில் மகுடம் வென்ற மங்கை.!
கவர்ச்சிக்கன்னி:
அதனைத்தொடர்ந்து, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர், கவர்ச்சியான வேடங்களையும் அன்றைய நாட்களில் துணிகரமாக ஏற்று நடித்ததால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டானது. இதனிடையே கடந்த 22 செப்டம்பர் 1996 ஆம் ஆண்டு கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, முதல் நாள் இரவில் தனது தோழிக்கு தொடர்பு கொண்டு முக்கியமான விஷயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்பதால் விரைந்து கிளம்பி வருமாறும் கூறிய நிலையில், மறுநாள் காலையில் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டவாறு சடலமாக மீட்கப்பட்டார்.
ரசிகர்கள் மரியாதை:
பிரேத பரிசோதனை முடிவில் அவர் அதிகளவு மதுபானம் அருந்தியதால், போதையில் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை அந்த மர்மம் நீடித்து வருகிறது. சமீபத்தில் விஷாலின் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில், நடிகை சில்க் ஸ்மிதா தொடர்பான காட்சிகளும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளான இன்று, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து, தங்களது அஞ்சலியை செலுத்தினர். மேலும், ஆதரவற்றோர் 25 பேருக்கு அவர்கள் உணவு வழங்கி நலத்திட்ட பணிகளை செய்தனர்.
சில்க் சுமிதாவின் நினைவு நாளில் ஈரோடு ரசிகர்கள் மலர்தூவி மரியாதை:
சில்க் சுமிதாவும் - நிருபரும் உரையாடிய சிறுதொகுப்பு:
அழகே பொறாமைப்படும் பேரழகி என ரசிகர் நெகிழ்ச்சி பதிவு:
தென்னிந்தியாவின் காந்தக்கண்ணழகி சில்க் சுமிதாவுக்கு ரசிகரின் பாராட்டு:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)