Rekha Singh | Miss Universe India 2024 (Photo Credit: Instagram)

செப்டம்பர் 23, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வைத்து, மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2024 (Miss Universe India 2024) போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியின் முடிவில் 36வது போட்டியாளராக கலந்து கொண்ட 18 வயதுடைய ரேகா சிங் (Rekha Singh) என்ற குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பெண்மணி, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அழகியாக மிஸ் யூனிவர்ஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். Parvathi Nair: நடிகை பார்வதி நாயரின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தேனாம்பேட்டை காவல்துறையினர் அதிரடி.. நடந்தது என்ன?.!

51 போட்டியாளர்களில் முதலிடம்: 

மொத்தமாக 51 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், ரேகா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார். அதனைத்தொடர்ந்து, பிரஜினல் பிரியா ரன்னராகவும், சாவி வெஜ் என்பவர் இரண்டாவது ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மிஸ் யூனிவர்ஸ் இந்திய அழகிகளை தேர்வு செய்யும் நடுவராக நிகில் ஆனந்த், நடிகை ஊர்வசி ரவுட்டலா, வியட்நாம்மை சார்ந்த நடிகர் நஜியூயன், பேஷன் போட்டோகிராபர் ரயன் பெர்னாண்டஸ், ராஜூ ஸ்ரீவஷ்டவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வெற்றியால் உச்சகட்ட மகிழ்ச்சியை அடைந்துள்ள ரேகா, தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா யுனிவர்ஸ் அழகிப்பட்டம் வென்ற ரேகா: 

 

View this post on Instagram

 

A post shared by Miss Universe India (@missuniverseindiaorg)