Urfi Javed Arrested?: பிரபல ஹிந்தி நடிகை காவல்துறையினரால் கைது?.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி..! விபரம் உள்ளே.!
பாலின சமத்துவத்தை மக்களிடையே போதிக்க வேண்டும் என கொள்கை வைத்து, உடல் அங்கங்கள் தெரியும் உடையை அணிந்து வித்தியாசமான முறையில் சமத்துவத்தை ஏற்படுத்த முயற்சிப்பதே இவரின் கொள்கை ஆகும்.
நவம்பர் 03, மும்பை (Cinema News): ஹிந்தியில் ஒளிபரப்பாகிய Bade Bhaiyya Ki Dulhania, Chandra Nandini, Meri Durga உட்பட பல நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை உர்பி ஜாவேத் (Urfi Javed). தொலைக்காட்சித்தொடர் மற்றும் வெப்செரிஸ் போன்றவற்றில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் இந்திய அளவில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார்.
ஒவ்வொருவரிடமும் பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று கூறி, தனது உடல் அங்கத்தை அளவாக மறைக்கும் குட்டியான ஆடை, அல்லது மேலாடையின்றி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு பிரபலமடைந்த நடிகைகளில் இவர் கவனிக்கத்தக்கவர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.2 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர். Orange Alert for Tamilnadu: அப்படிப்போடு.. நாளை முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை; ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!
இந்நிலையில், நடிகை உர்பி ஜாவேத் கைது செய்யப்படுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கருப்பு நிறம் கொண்ட காரில், பின்னால் காவல்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண் காவலர்கள், உர்பியிடம் சென்று இவ்வுளவு சின்ன உடையை எதற்காக அணிந்து வருகிறீர்கள்? என கேட்டு, கைது செய்யப்படும் தகவலை தெரிவித்து, அவரை காருக்கு அழைத்து சென்று தங்களுடன் அழைத்து செல்கிறார்கள்.
இவர்களுடன் மூத்த அதிகாரியை போல ஆண் காவலர் ஒருவரும் வந்துள்ளார். தான் எதற்காக கைது செய்யப்படுகிறேன் என்பது தெரியாமல் நடிகையும் விழிபிதுங்கியவாறு காரில் காவலர்களுடன் செல்கிறார். இந்த விடியோவை பொய் என கூறும் நெட்டிசன்கள், பெண் காவலர்கள் அணிந்து வந்த ஷூ, காரில் அவர்கள் அழைத்து சொல்லப்படும்போது குற்றவாளியை நடுவே அமரவைத்து செல்லாதது போன்ற காரணங்களை முன்வைக்கின்றனர்.
வீடியோ பிராங்க்காக எடுக்கப்பட்டதா?, இல்லையேல் உண்மையாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டாரா? என்பது தெரியவில்லை.