Va Varalam Va First Look: பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் படம்; வா வரலாம் வா முதற்பார்வை வெளியானது.. லிங்க் உள்ளே.!
இயக்குனர் எஸ்.பி.ஆர், எல்.ஜி ரவிச்சந்தர் ஆகியோரின் இயக்கத்தில், தேவாவின் இசையில் உருவாகியுள்ள வா வரலாம் வா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 11, சென்னை (Cinema News): பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸை (Balaji Murugadoss) நாயகனாக அறிமுகம் செய்யும் திரைப்படம் வா வரலாம் வா (Va Varalam Va). இப்படம் தேனிசை தென்றல் தேவாவின் (Deva) இசையில் உருவாகி இருக்கிறது. படத்தை எஸ்.ஜி.எஸ் கிரியேடிவ் மீடியா (SGS Creative Media) தயாரித்து வழங்குகிறது.
எல்.ஜி ரவிச்சந்தர், எஸ்.பி.ஆர் (LG Ravichandar & SBR) இணைந்து படத்தை இயக்கி வழங்கி இருக்கின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் பாலாஜி முருகதாஸ்.
இவர் மாடலிங் துறையில் கால்பதித்து வந்தவர் என்பதால், முதலில் விளம்பரங்களில் நடித்து வந்த நிலையில், பிக்பாஸில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். 9/11 Attacks 22nd Anniversary: 9/11 பயங்கரவாத சம்பவத்தின் 22-ம் ஆண்டு நினைவு நாள்: மனமுருகி அஞ்சலி செலுத்திய நியூயார்க் மாகாணம்.!
குழந்தை கடத்தலை மையமாக கொண்ட நகைச்சுவை படத்தில் மைம் கோபி வில்லனாக (Mime Gopi) நடித்திருப்பதால் படம் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. மஹானா சஞ்சீவி கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
இவர்களைத்தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்களில் ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரோமா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், மீசை இராஜேந்திரன், போண்டாமணி, கிரேன் மனோகர், திலீபன், யோகிசாமி, பிரபாகரன், வடிவேல் பீட்டர், ராமசாமி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். Obesity & Kidney Problem: உடல்பருமனும், சிறுநீரக கோளாறும்… பெண்களும்-ஆண்களும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ.!
தேவாவின் இசையில் உருவாகியுள்ள வா வரலாம் வா திரைப்படத்திற்கு காதல் மதி, எஸ்.பி.ஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதி கொடுத்துள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்து வழங்கியுள்ளார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேடந்தாங்கல் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட வா வரலாம் வா திரைப்படத்தின் முதற்பார்வை (First Look) இன்று இசையமைப்பாளர் தேவா அவர்களால் வெளியிடப்பட்டது. Realme C51 Launch: பிளிப்கார்டில் நள்ளிரவு தொடங்குகிறது ரியல்மி C51 விற்பனை; பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற அசத்தல் ஸ்மார்ட்போன்..! விபரம் இதோ..!
படத்தின் படப்பிடிப்பு பணிகளை போல, எடிட்டிங் உட்பட வெளியீடுகளுக்கான பிற பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் முதற்பார்வை மற்றும் போஸ்டர் எப்போது வேண்டுமானாலும் வெளியிடப்படலாம் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், படத்தின் முதற்பார்வை இன்று தேனிசைத்தென்றல் தேவா, இயக்குனர் எஸ்.பி.ஆர்., நாயகி மஹானா சஞ்சீவி, நாயகன் பாலாஜி முருகதாஸ் உட்பட படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)