Director Suresh Sangaiah: இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்; கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலையால் சோகம்.!
இளம் வயதில் முதல் படத்திலேயே பலரின் கவனத்தை பெற்ற பிரபல இயக்குனர் சுரேஷ் சங்கையா, மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு கல்லீரல் செயலிழந்து காலமானார்.
நவம்பர் 15, பார்க் டவுன் (Cinema News): தமிழில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உட்பட பல படங்களை இயக்கி, மக்களின் கவனத்தை பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா (41). இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.
ஒரு கிடாயின் கருணை மனு:
கடந்த 2017ம் ஆண்டு நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தை இயக்கி வழங்கி, அவரின் முதல் படத்திலேயே மக்களின் மதிப்பை பெற்றார். மாறுபட்ட பார்வையில் வெளியான அவரின் படம் நல்ல வரவேற்பைபும் பெற்றது. Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!
மஞ்சள் காமாலையால் சிகிச்சை:
சமீபத்தில், மஞ்சள் காமாலை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்ட சுரேஷ், சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு மஞ்சள் காமாலை காரணமாக, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டும் அவதிப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
திரையுலகினர் இரங்கல்:
இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில், சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. மஞ்சள் காமாலையால் கல்லீரல் செயலிழந்து அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.