Sarath Babu Died: நடிகர் சரத் பாபு இயற்கை எய்தினார்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ரஜினிகாந்துடன் விரல்விட்டு எண்ணிவிடும் படத்தில் நடித்து இருந்தாலும், அவர் மக்களின் மனதில் என்றோ இடம்பிடித்துவிட்டார்.
மே 22, ஹைத்ராபாத் (Cinema News): தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய உச்ச நடிகர் ஆகவும், தற்போது துணை நடிகராகவும் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகர் சரத் பாபு. இவர் ஆந்திர பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.
கடந்த 1973 ஆம் ஆண்டு திரைத்துரையில் அடியெடுத்து வைத்த சரத் பாபுவுக்கு தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் அறிமுகத்தை தந்தாலும், தமிழில் அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து ஆகிய திரைப்படங்கள் அமோக வெற்றியை தந்தது. Summer Season Avoid Foods: கோடை காலத்தில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் உணவுகள் எவை?.. மக்களே தப்பி தவறியும் சாப்பிட்டுடாதீங்க.!
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சரத் பாபு, தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இதனிடைய அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியாகி இருந்த நிலையில், முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அவை போலியானவை என்று அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது அவரது மறைவு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். இவருக்கு தற்போது 71 வயது ஆகிறது. தனது திரையுலக வாழ்க்கையில் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.