Vishal on Sexual Harassments: உப்புமா கம்பெனிகளால் பாதிக்கப்படும் பெண்கள்; தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை: விஷால் போட்டுடைத்த உண்மை.. முழு விபரம் உள்ளே.!
உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்போரை செருப்பால் அடிக்க வேண்டும் என விஷால் கூறி இருக்கிறார்.
ஆகஸ்ட் 29, கீழ்பாக்கம் (Cinema News): சென்னையில் உள்ள கீழ்பாக்கம் (Kilpauk) பகுதியில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில், தமிழ்த் திரைப்பட நடிகர் & தயாரிப்பாளர், நடிகர் சங்கத்தின் தலைவர் விஷால் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு உதவிகள் செய்தார். முதியவர்களுக்கு தனது கைகளால் சோறு இட்டுக்கொடுத்தவர், செய்தியாளர்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரத்திற்கு கண்டனமும் தெரிவித்தார்.
செருப்பால் அடிங்க:
இதுகுறித்து அவர் பேசுகையில், "திரைத்துறையில் நடிக்க வாய்ப்புக்கேட்டு வரும் நடிகைகளிடம், புதிதாக அறிமுகமாக நினைக்கும் பெண்களிடம் பாலியல் ரீதியாக படுக்கைக்கு அழைப்பது குறித்த குற்றசாட்டுகள் காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. பெண்கள் இனி சுதாரித்து செயல்பட வேண்டும். ஒருவன் உங்களை தவறாக அழைக்கிறான் என்றால், அவனை செருப்பால் அடிக்க வேண்டும். உங்களை அவன் பயன்படுத்தக்கூடாது என்ற விஷயத்தில் பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும். Coolie Movie Character Announcement Update: கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகர்.. சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ரெடியாகும் விருந்து..!
உப்புமா கம்பெனிகளை நம்பாதீங்க:
திரைத்துறையில் உப்புமா கம்பெனிகள் என்பவை அதிகம் இருக்கின்றன. அவர்கள் வேண்டுமென்ற பெயரளவுக்கு பிரம்மாண்டமான அலுவலகத்தை ஏற்படுத்தி, அங்கு நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் கொடுத்து, பெண்களை அழைத்து போட்டோ சூட் நடத்துவார்கள். பின் அவர்களை பயன்படுத்தி, அலுவலகத்தையும் காலி செய்து சென்றுவிடுவார்கள். எந்த பிரபலமாக இருந்தாலும், தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
குழு அமைக்க ஏற்பாடு:
எங்களின் பார்வைக்கு புகாரோ அல்லது தகவலோ வந்தால், நாங்கள் அதுகுறித்த விசாரணையை மேற்கொள்வோம். குற்றசாட்டு உறுதியானால் நடவடிக்கை எடுப்போம். திரைத்துறையில் 20% பெண்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைக்கின்றன, 80% பெண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெண்கள் தாங்கள் படவாய்ப்புக்காக அணுகச்செல்லும் நிறுவனம் குறித்து உரிய விசாரணை நடத்துவது நல்லது.
தைரியத்தை அதிகரியுங்கள்:
விரைவில் 10 பேர் கொண்ட நடிகர் சங்க குழு அமைக்கப்பட்டு, பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நடிகர் சங்கம் என்பது ஆண்களுக்கு மட்டுமானது இல்லை, பெண்களுக்கும் தான். பெண்கள் தங்களின் மன தைரியத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறான விஷயங்களை எதிர்கொள்ள கட்டாயம் அதுவே உங்களுக்கு பயன்படும்" என தெரிவித்தார்.