Rashmika Mandanna Helps Kerala: கேரளா மாநில அரசுக்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி அளித்த நடிகை ராஷ்மிகா..!

அவர்களுக்கு ஆதரவாக பிரார்த்தனையுடன் பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்கின்றனர்.

Wayanad Landslides | Rashmika Mandanna (Photo Credit: @rameshlaus / @Kumari_Jeyan X)

ஆகஸ்ட் 01, வயநாடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு (Wayanad Landslides) மாவட்டம், சூரல்மலை, அட்டமலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 277 க்கும் அதிகமானோர் பரிதாபமாக மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரைவிட்டனர். தற்போது முப்படைகள், தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசுக்கு மக்கள், தொழிலதிபர்கள் நிதிஉதவி அளிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. President Putin Condoles on Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு மரணங்கள்; ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல்.! 

நடிகை ரூ.10 இலட்சம் நிதிஉதவி:

இந்நிலையில், நடிகை ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), கேரளா மாநில அரசின் வங்கிக்கணக்கில் ரூ.10 இலட்சம் பணம் செலுத்தியுள்ளார். வயநாடு மீட்பு பணிகளுக்காக, அங்குள்ள மக்களின் மறுவாழ்வுக்காக செலவிடப்படும் தொகைக்காக முன்னதாகவே முதல் ஆளாக நடிகர் சியான் விக்ரம் ரூ.20 இலட்சம் நிதிஉதவி வழங்கி இருந்த நிலையில், நடிகை ரஷ்மிகாவும் ரூ.10 இலட்சம் வழங்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார். தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னதாகவே ரூ.5 கோடி நிதிஉதவி வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.