Aishwarya Rajinikanth And Dhanush Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர்..!
விவகாரத்து வழக்கு தொடர்பாக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
நவம்பர் 21, மும்பை (Cinema News): தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). அவர் நடிப்பில் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார். 'பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் தனுஷ். அண்மையில் வெளியான அவரது 50-வது படமான 'ராயன்' படத்தையும் அவரே இயக்கினார். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக இட்லி கடை (Idly Kadai) என்ற படத்தையும் இயக்கி வருகின்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவ.18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது. Tirupur Subramaniam: "யூடியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைய, ரிவியூ எடுக்கத்தடை" - திரையரங்கு உரிமையாளர் நிர்வாகம் அறிவிப்பு.!
இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இன்று இந்த வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷும் ஐஸ்வர்யாவும் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதி என கூறியதாக தெரிகிறது. இந்த வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.