நவம்பர் 21, திருப்பூர் (Tiruppur News): சூர்யாவின் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கங்குவா (Kanguva) திரைப்படம், மிகப்பெரிய அளவிலான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதனால் படத்தின் வசூல் என்பது பெரிய அளவில் படிக்கப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள் பலரும் தங்களின் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தது, திரைப்பட தயாரிப்பு குழு இடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. Keerthi Suresh Wedding: கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்.. 15 வருட காதலுடன் திருமணமா?!
ஞானவேல் ராஜா தரப்பு கோரிக்கை:
இதனால் ஸ்டுடியோ கிரீன் தலைமையிலான தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர்கள் சங்கம் வாயிலாக உடனடி விமர்சனம் போன்ற விசயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து இருந்தது. சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனும் தனது கண்டனத்தை விமர்சகர்களுக்கு எதிராக முன்வைத்து இருந்தார். Diaphragm Failure: நுரையீரல் தசை கிழிந்து சிறுமி உயிரிழப்பு.. மருத்துவர்கள் கூறுவது என்ன?.. மக்களே கவனம்.!
யூடியூப் சேனல் ரிவியூ கேட்க தடை:
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர், ஸ்ரீ சக்தி சினிமாஸ் உரிமையாளர், திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தபோது, "யூடியூப் சேனல்கள் திரையரங்கு வளாகத்திற்குள் இனி வரக்கூடாது. திரையரங்கில் படம் வெளியாகும் முதல் நாளில் யூடியூப் ரிவியூ கேட்க தடை விதிக்கப்படுகிறது. அனுமதியின்றி திரையரங்குக்குள் வந்து வீடியோ எடுத்து ரிவியூ கேட்டால், காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும். இது காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது" என கூறினார்.