Second Look Poster Of Good Bad Ugly: பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி.. கைதி ஆடையில் மாஸ் காட்டும் அஜித்..!
அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜூன் 27, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும் ஆரவ்வும் காரில் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. Digital Arrest Scam: போலி காவல்துறையினரிடம் டிஜிட்டலில் கைதான பாட்டி.. 83 லட்சம் மோசடி.. டெல்லியில் பரபரப்பு..!
குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. நாக்கை துருத்திக்கொண்டு, கையில் டாட்டுவுடன் நிற்கும் அஜித்தின் கலர்ஃபுல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.