Ajith kumar Racing: "ஐ எம் பேக்" கார் ரேஸில் ரீ என்ட்ரி கொடுத்த தல அஜீத்..!
அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நவம்பர் 28, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. DJ Arrested: லிவிங் டுகெதர் வாழ்க்கையால், தமிழ் துணை நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. டிஜே கைது.!
அஜித் கார் ரேஸிங்: இந்நிலையில் கார் பந்தயங்களில் அதீத ஆர்வம் கொண்டவரான நடிகர் அஜித் குமார் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற அணியின் உரிமையாளராகவும் அவரே திகழ்கிறார். 15 ஆண்டுகளுக்குப் பின் ரேஸிங் களத்தில் இறங்கியுள்ள அஜித், பந்தயத்தில் பயன்படுத்தப்படும் உடைகள், கார்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த அஜித் குமார், தனது நிறுவன லோகோ பதித்த காருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார். அவை தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.