Good Bad Ugly: வைரலாகும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' புகைப்படம்.. ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் லுக்.!
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அக்டோபர் 11, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. Vettaiyan Review: தெறிக்க விட்ட கோலிவுட் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்.. வேட்டையன் முழுவிமர்சனம் இதோ.!
அதில் அஜித் குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளனர். கோட் சூட் அணிந்து கொண்டு ஸ்டைலான அஜித்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இரண்டு கைகளிலும் வரையப்பட்டிருக்கும் டாட்டூவும் கவனம் ஈர்த்திருக்கிறது. இதில் அஜித் மாஸ் லுக்கில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு புதியத் தோற்றம் கொண்டிருக்கிறார். அஜித், இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி லுக்கில் அஜித்: