Amaran Trailer: "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" அமரன் டிரைலர் நாளை வெளியீடு.!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
அக்டோபர் 22, சென்னை (Cinema News): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவரது 21வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அமரன் (Amaran) என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். IIFA Awards 2024: ஐஃபா விருதுகள் 2024.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்.!
அமரன் ரிலீஸ்: எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.
அமரன் டிரைலர் நாளை வெளியீடு: