Bigg Boss Tamil Season 8: காதலருக்கு பிக் பாஸ் வீட்டிலேயே ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா; உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. யார் அந்த அதிஷ்டசாலி?
டிசம்பர் 27, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா (Soundarya), விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர். இந்த வார நாமினேஷனில் அன்ஷிதா, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, மஞ்சரி, ராணவ், விஜே விஷால், ஜெப்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Bigg Boss Tamil Season 8: பிக் பாஸில் முத்துக்குமரன் அம்மா, அப்பா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!
குடும்பங்களை இணைத்த பிக் பாஸ்:
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் குடும்பத்தினர் பலரும், தங்களின் குடும்பத்தவரை சந்தித்து வருகின்றனர். இதனால் போட்டி விறுவிறுப்பு பெற்றுள்ளது. போட்டியாளர்களின் நல்லது, கெட்டதை அவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். இதனிடையே, இன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சத்யா தொடரின் நாயகன் விஷ்ணு (Vishnu Vijay), பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தார். Comedians Into Heroes: காமெடியனாக இருந்து ஹீரோக்களாக மாறிய நடிகர்கள்.. முழுலிஸ்ட் இதோ..!
யாருமே எதிர்பார்க்காத காதல்:
அப்போது, சௌந்தர்யா நஞ்சுண்டன் (Soundariya Love Proposal) விஷ்ணுவுக்கு காதல் ப்ரபோஸ் செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத விஷ்ணு, நாம் இருவரும் நண்பர்கள். எனக்கு இதுபோன்ற ப்ரபோசல் வந்திருக்கவில்லை. என்னால் என்ன சொல்வது என தெரியவில்லை என்று கூறுகிறார். இதனை சற்றும் எதிர்பாராத போட்டியாளர்கள் கரகோஷம் எழுப்ப, சௌந்தர்யா தனது நண்பருக்கு காதலை வெளிப்படுத்தியது உறுதியாகியுள்ளது. இந்த காதல் ப்ரபோசல் வீடியோ நெட்டிசன்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.