டிசம்பர் 26, கோடம்பாக்கம் (Cinema News): சினிமாவில் நகைச்சுவை என்பது ஒரு அங்கமாகவே திகழ்ந்து வருகிறது. எப்பேர்பட்ட கிரைம் தில்லர் படமாக இருந்தாலும் படத்தில் ஒரு காமெடியாவது இடம்பெற்றுவிடும். கவுண்டமணி, செந்தில் போன்றோரின் காலங்களுக்கு முன்பு வரை நகைச்சுவை என்பது படங்களில் தனியாக ஒரு காட்சிகளாகவே வைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு வந்த படங்களில் கதைகளுடனேயே நகைச்சுவை காட்சிகள் வர ஆரம்பித்தன. பிறகு நகைச்சுவை நடிகர்களுக்கும் ஹீரோக்களுக்கான இடங்களை ஒதுக்கினர். சொல்ல போனால் பல படங்கள் காமெடிக்காக மட்டுமே ஓடியதுண்டு.
காமெடியன் டூ ஹீரோ:
தற்போது நிறைய நகைச்சுவை நடிகர்கள், ஹீரோக்களாக நடித்து வருகின்றன. அவர்கள் படங்களும் நல்ல ஹிட் அடிக்கின்றன. பழைய படங்களிலும் தான் காமெடியன்கள் ஹீரோக்களாக நடித்தனர். ஆனால் அந்த கதைகள் அவர்களின் கதாப்பாத்திரங்களுடன் ஏற்றவாறு நகைச்சுவைப் படங்களாக இருந்தன. ஆனால் தற்போது முன்னனி காமெடியன்ஸ் காமெடிப் படங்கள் மட்டுமல்லாமல் சீரியஸான படங்களிலும் நடிக்கின்றன. Bigg Boss Tamil Season 8: சொளந்தர்யாவை ரவுண்டு கட்டி அடித்த ராணவ் குடும்பம்.. வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ.!
சமீபத்தில் வெளிவந்த நகைச்சுவை நடிகரான யோகிபாபு நடித்த ‘பொம்மை நாயகி’ திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதே போல் இயக்குனர் வெற்றிமாறன், நகைச்சுவை நடிகரான சூரியை வைத்து இயக்கி வரும் ‘விடுதலை 2’ படமும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை பெற்று வருகிறது. ஏன் இப்போது முன்னனி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் காமெடியனாக தான் சினிமாவில் அறிமுகமானார். சந்தானம், சிவகார்த்திகேயன், சூரி, யோகி பாபு போன்றோர் தற்போது காமெடி படங்கள் மட்டுமின்றி அக்ஷன், கருத்து நிறைந்த படங்களின் நடித்து வருகின்றனர். இவர்கள் இது போன்ற படங்கள் தான் நடிக்க வேண்டும் என்றில்லாமல், தியேட்டரிலும், டிவி சேனலிலும் பார்க்கும் போது சிரித்து மகிழ்ந்து, ரசிக்க கூடிய நல்ல கதைகள் கொண்ட படமாக வந்தால் சரி. நகைச்சுவைப் படங்களையே நாம் மனஅமைதிக்காக தானே பார்க்கிறோம்.