டிசம்பர் 26, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடந்த வாரம் ரஞ்சித் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.
பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்க்:
மறுபக்கம் இந்த வாரம் எலிமினேஷனில் ஆஷிதா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெப்ரி, ராணவ், மஞ்சரி, பவித்ரா என 7 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பார்கள். போட்டியாளர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தபோதே தீபக்கின் மனைவி சிவரஞ்சனியும், மகனும் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்கள். தொடர்ந்து மஞ்சரியின் அம்மா, மகன் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். மேலும் விஷாலின் அம்மா, அப்பா உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். Comedians Into Heroes: காமெடியனாக இருந்து ஹீரோக்களாக மாறிய நடிகர்கள்.. முழுலிஸ்ட் இதோ..!
நேற்று போட்டியாளர் ராணவ்வின் குடும்பத்தினர் உள்நுழைந்தனர். இவர்களில் ராணவின் தங்கை, சொளந்தர்யாவிடம் அவன் நடிக்கிறான் நடிக்கிறான் என கூறுகிறீர்கள். அப்படி என்ன எங்கள் அண்ணன் மீது வன்மம் என கேட்டார். மேலும் சொளந்தர்யா அம்மா, அப்பா உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். இன்று அதிகாலையிலேயே ஜெஃப்ரி குடும்பத்தினர் வந்துவிட்டனர். அதை தொடர்ந்து முத்துக்குமாரர் குடும்பத்தினர் வந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களைப் பார்த்ததும் முத்துக்குமரனுக்கு கண்களில் நீர் வருகிறது. ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் இங்கே அழக்கூடாது ஏற்கனவே நிறைய அழுதாச்சு போதும்மா என்று அம்மாவிடம் சொல்கிறார். அப்போது அவருடைய அப்பா நீ அழாத.. அழுதா புள்ள அழுதுருவான் என்று சொன்னது பார்ப்பவரை நெகிழ்ச்சி அடைய செய்தது.