Ilaiyaraaja News: “எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை” - இளையராஜா பேட்டி.!

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Ilaiyaraaja (Photo Credit: Facebook)

டிசம்பர் 16, ஶ்ரீவில்லிப்புத்தூர் (Cinema News): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (Andal Temple) ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு திவ்ய பாசுரம் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், ஶ்ரீ திர்தண்டி சின்ன ஶ்ரீமன் நாராயண ராமானுஜ ஜீயர் தலைமை வகித்தனர். இளையராஜா (Legendary composer Ilaiyaraaja) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக ஜீர்கள் கோவிலின் கருவறைக்கு அருகே பெருமாளை ஆண்டாள் தரிசித்ததாக கூறப்படும் அர்த்த மண்டபத்துக்கு சென்றனர்.

அப்போது அவர்களுடன் இளையராஜாவும் உள்ளே சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீயர்களும் பட்டர்களும் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்க வேண்டும் என கூறினர். வெளியே நின்றபடியே இளையராஜா வழிபாடு செய்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தீண்டாமையின் உச்சமாக இளையராஜாவை வெளியே நிற்க வைத்ததாக கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. Bigg Boss Tamil Season 8: ஜாக்குலினுக்கு ஆப்பு வைத்த சவுண்ட்.. சகுனி விளையாட்டு ஆரம்பம்.!

கோவில் நிர்வாகம் விளக்கம்: இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அர்த்த மண்டபத்திற்குள் உற்சவர் சிலைகள் இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை எனவும், இளையராஜாவை கட்டாயப்படுத்தவில்லை. ஜீயர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரே தான் வெளியே சென்றார் எனவும் கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

இளையராஜா விளக்கம்: இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா,”என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.

இளையராஜா விளக்கம்: