Jani Master's Case: டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார்.. தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

உடன் பணியாற்றிய 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்துள்ளார்.

Jani Master (Photo Credit: @Instagram)

செப்டம்பர் 18, ஹைதராபாத் (Cinema News): மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை (Hema Committee) தொடர்ந்து, பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் (Jani Master) தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இவர் தனுஷின் ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’, ‘‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

பாலியல் புகார்: இவர் மீது, அவர் குழுவில் பணிபுரியும் 21 வயது பெண் நடனக் கலைஞர், ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது ஆந்திர மாநிலம் ராயதுர்கம் காவல் துறையினர் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376, பிரிவு 506, பிரிவு 323 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். CID Sakunthala Passed Away: பழம்பெரும் நடிகை ‘சி.ஐ.டி சகுந்தலா’ மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்.!

இந்த பாலியல் புகார் எதிரொலியாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் உறுப்பினராக இருக்கும் ஜானி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அக்கட்சி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் ஜானியை தெலுங்கு இயக்குனர் சங்கத்தின் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்துள்ளனர்.